உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிராம சபை கூட்டத்தில் புகுந்த மக்களால் பரபரப்பு

கிராம சபை கூட்டத்தில் புகுந்த மக்களால் பரபரப்பு

உலக தண்ணீர் தினத்தையொட்டி, கொடைக்கானல், பள்ளங்கியில் கிராம சபை கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. அரசு திட்டங்கள், தண்ணீர் சேமிப்பு குறித்து கலெக்டர் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வில்பட்டி ஊராட்சி, கோவில்பட்டியை சேர்ந்த மக்கள், அல்லி ஓடை பகுதியில் குடிநீர் கிடைக்கவில்லை என கலெக்டரிடம் புகார் கூறினர். கல்லறை அருகே கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்வதாகவும், அந்த குடிநீர் மாசடைந்து மஞ்சள் நிறத்தில் வருவதாக கூறினார். கேனில் பிடித்து வந்த குடிநீரை கலெக்டரிடம் காட்டிய அவர்கள், இதை எப்படி குடிக்க முடியும் என கேட்டனர்.

மார் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை