தண்ணீர் தொட்டியை அசுத்தப்படுத்தியவர்களை பிடித்து போலீஸ் விசாரணை! Water Tank Issue | Contamination
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கவுண்டநாயக்கன்பாளையத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. தொட்டியின் மேல்பகுதிக்கு அடிக்கடி சிலர் சென்று மது அருந்துவதும், தொட்டியில் இறங்கி குளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். சில தினங்களுக்கு முன் தொட்டியின் மேல் பகுதிக்கு சென்றவர்கள் மது, கஞ்சா போன்றவற்றை பயன்படுத்தி உள்ளனர். அங்கேயே வாந்தி எடுத்தும், மலம் கழித்தும் தொட்டியை அசுத்தப்படுத்தியதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு பின் இதை அறிந்த உள்ளாட்சி துறையினர் தொட்டியை சுத்தம் செய்துள்ளனர். தொட்டியை அசுத்தப்படுத்தியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் நிஷாந்த், சஞ்சய் என்கிற இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.