வயநாடு நோக்கி வரும் பாலூட்டும் தாய்மார்கள் | Wayanad | Sajin Parekkara
கேரளாவின் இடுக்கி உப்புதரை பகுதியை சேர்ந்தவர் விவசாயி சஜின், வயது 35. இவரது மனைவி பாவனா, வயது 30. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் வயநாடு நிலச்சரிவில் 300 பேர் இறந்ததை கேள்விப்பட்டு பாவனா அதிர்ச்சி அடைந்தார். நிலச்சரிவில் தாயை இழந்து பாலுக்காக ஏங்கும் குழந்தைகளின் நிலையை அறிந்து வேதனையடைந்தார். அவர்களுக்கு தாய்ப்பால் தானம் கொடுக்க முடிவு செய்தார். கணவரிடம் சஜிஜினிடம் கேட்டு அவரது சம்மதம் பெற்றார். இதையடுத்து வயநாட்டில் தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வேண்டும் என்றால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.
ஆக 02, 2024