கைகொடுக்குமா டிஎன்ஏ பரிசோதனை? | Wayanad | DNA Test
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சூரல்மலை, முண்டக்கை கிராமங்கள் நிலைகுலைந்து போகின. நிலச்சரிவால் வீடுகள் மண்ணுக்குள் புதைந்து ஏராளமான மக்கள் அதில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணுவத்தின் சிறப்பு குழுவினர் சாலியாறு ஆறு, அதனையொட்டியுள்ள வனப்பகுதிகளில் தேடினர். காணாமல் போனவர்களையும் தேடும் பணி நடக்கிறது.
ஆக 14, 2024