/ தினமலர் டிவி
/ பொது
/ நிலச்சரிவு மீட்பு பணிக்கு கைகொடுக்கும் பாலம்! wayanad| land slide|kerala rescue operation
நிலச்சரிவு மீட்பு பணிக்கு கைகொடுக்கும் பாலம்! wayanad| land slide|kerala rescue operation
கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. சூரல்மலை டு முண்டக்கைக்கு செல்லும் வழியில் இருந்த பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பாலம் இருந்த பகுதியை தாண்டி சென்று மீட்பு பணியை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. அங்கு இடிபாடுகள் அதிகம் இருப்பதால் பலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால், 160 ராணுவ பொறியாளர்கள் இணைந்து 2 நாட்களாக தற்காலிக இரும்பு பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டனர். தற்போது பாலம் பணிகள் முடிந்துள்ளன.
ஆக 01, 2024