/ தினமலர் டிவி
/ பொது
/ வயநாட்டில் ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த கதி-திடுக் வீடியோ | wayanad landslide | Soochipara Waterfalls
வயநாட்டில் ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த கதி-திடுக் வீடியோ | wayanad landslide | Soochipara Waterfalls
கேரளாவின் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். அந்த பகுதியில் இன்னும் மீட்பு பணி நடந்து வருகிறது. இதுவரை மீட்கப்பட்டதில் 175 சடலங்கள் ஆற்றில் இருந்து தான் கிடைத்தன. இதனால் முண்டக்கையில் இருந்து சாலியாற்றின் 50 கிலோ மீட்டர் தூரம் வரை தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி இன்று பகலில் சூச்சிபாறை என்ற இடத்தில் ராணுவத்தின் ஒரு குழுவினர் தேடிக்கொண்டு இருந்தனர். அந்த இடத்தில் உள்ள ஆற்றில் மிகப்பெரிய அருவி உள்ளது.
ஆக 03, 2024