மீட்புபடை கண் முன்னே உயிருக்கு போராடும் அதிர்ச்சி | Wayanad Land Slide | Kerala Land Slide
பாதி உடல் சேற்றில் புதைந்த நிலையில் அலறும் இளைஞர்! கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கி உள்ளது. மண்ணுக்குள் புதைந்தும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் இறந்தவர்கள் எண்ணிக்கை 100 ஐ தாண்டிவிட்டது. இன்னும் 1000 பேருக்கு மேல் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து உள்ளூர் மக்கள் சொல்லும் தகவல் அதிர வைக்கிறது. 3 வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி சரிவு ஏற்பட்டுச்சு. அப்போ ஏற்பட்டதை விட இது மோசமான சரிவு. ஒவ்வொரு பஞ்சாயத்தில் இருந்தும் மக்கள் மீட்பு பணிக்கு போயிருக்காங்க. மீட்பு பணி முடிய இன்னும் பல நாட்கள் ஆகலாம். இன்னும் மழை கொட்டிக்கிட்டே இருக்கு. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் முழுக்க சேறும் சகதியுமா இருக்கு. இந்த நேரத்தில் கவனமாக செயல்படவில்லை என்ற தேங்கி இருக்கும் சேறே மீட்பவர்களை காவு வாங்கி விடும். ஏற்கனவே மீட்கப்பட்டவர்கள் பலரது உடல் தனி தனி பாகங்களாக கிடைந்துள்ளது. சரிவு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட உடல்கள் பாறையில் மோதி உருக்குலைந்து இருக்கிறது. நிலச்சரிவு உண்டான பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் தாண்டி இருக்கும் ஆற்றில் உடல்கள் மிதந்து செல்கிறது. இன்னும் மீட்பு பணிகள் துரிதமாகும் போது பல அதிர்ச்சிகள் வெளிவரும் என உள்ளூர் மக்கள் கூறினர்.