/ தினமலர் டிவி
/ பொது
/ வயநாட்டில் நொடிக்கு நொடி அதிகரிக்கும் பதற்றம் | Wayanad Landslide | Wayanad Issue
வயநாட்டில் நொடிக்கு நொடி அதிகரிக்கும் பதற்றம் | Wayanad Landslide | Wayanad Issue
ஸ்பாட்டில் கால் வைத்த ராணுவம்! மேஜர் ஜெனரல் கொடுத்த அப்டேட் கேரளாவின் வயநாடு நிலச்சரிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்தும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் இறந்தவர்கள் எண்ணிக்கை 290ஐ தாண்டி விட்டது. இன்னும் நூற்றுக்கணக்கான மக்கள் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. மீட்பு பணியில் இறங்கியுள்ள ராணுவம் தற்காலிக பாலம் அமைத்து சரிவில் சிக்கிய முண்டக்கை கிராமத்தை அடைந்துள்ளது. எங்கே பார்த்தாலும் மரண ஓலம் கேட்கிறது. தோண்டும் இடங்களில் எல்லாம் சடலங்கள் மீட்கப்படுகிறது. மீட்பு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடைசி நபரையும் பாதுகாப்பாக அழைத்து வருவதே ராணுவத்தின் பணி என்கிறார் மேஜர் ஜெனரல் மேத்யூ.
ஆக 01, 2024