வயநாடு நிலச்சரிவு பற்றி இதுவரை வெளிவராத பகீர் உண்மை | wayanad landslide | wayanad tragedy report
கொத்து கொத்தாக மக்கள் உயிரை விழுங்கிய வயநாடு நிலச்சரிவின் கோரத்தை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது. பல கனவுகளோடு வாழ்ந்தவர்களை உருவம் தெரியாது சிதைத்து விட்டது வயநாடு நிலச்சரிவு. மரணம் எண்ணிக்கை 400ஐ தாண்டி விட்டது. இன்னும் 150 பேர் கதி என்னவென்றே தெரியவில்லை. இதுவரை கேரளா பார்த்ததிலேயே மிகப்பெரிய இயற்கை பேரிடர் இதுதான். இதற்கு முன்பு அதிகம் மக்களை கேரளா இழந்தது ஒக்கி புயலில் தான். அப்போது 320 பேர் வரை மரணம் அடைந்தனர். இவ்வளவு பெரிய நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஜிஎஸ்ஐ எனப்படும் இந்திய புவியியல் ஆய்வு மையம் வயநாட்டில் ஆய்வு செய்தது. முதல் கட்ட தகவல் அறிக்கை இப்போது வெளியாகி உள்ளது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.