அழைப்பிதழ் தர சென்றபோது அழையா விருந்தாளியாக வந்தனர்
ஆந்திராவின் அனந்தபுரம் நகர், ராஜஹம்சா வில்லாஸில் வசிப்பவர் வெங்கடசிவா. இவர் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் ஏற்பாடு செய்துள்ளார். உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றுள்ளார். இரவு காவலர் ரவுண்ட்ஸ் செல்லும்போது, வெங்கடசிவா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. ஓனருக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்தார். பீரோ லக்கர் உடைக்கப்பட்டு இருந்தது. திருமணத்திற்காக வைத்திருந்த 20 லட்சம் ரூபாய், 3.5 கோடி மதிப்புள்ள வைரம், தங்க நகைகள் மொத்தமும் கொள்ளை போயிருந்தது.
ஜன 23, 2025