அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சொல்வது என்ன | WHO | Doctors Association | Chennai
டாக்டர்கள், நர்சுகள் எண்ணிக்கை போதாது WHO பரிந்துரை பின்பற்றவில்லை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் நர்ஸ்கள் இல்லாததுதான் டாக்டர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமாக உள்ளது என, அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார். நோயாளிக்கு குறிப்பிட்ட நேரம் கொடுத்து பேசும் அளவிற்கு, அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு நேரமில்லை. கொரோனாவுக்கு முன், ஒரு நாளைக்கு, 40 முதல், 60 நோயாளிகள் பார்த்து வந்த இடத்தில் தற்போது 200 பேர் வரை, ஒரு டாக்டர் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. அதேபோல, கிண்டி மருத்துவமனை துவங்கிய போது, 600 நோயாளிகளுக்கு, 60 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது 3,000 நோயாளிக்கு, அதே அளவிலான டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இதனால், டாக்டர்களுக்கு பணிச்சுமை, மன அழுத்தம் அதிகரித்துள்ளது.