மனைவியை தீர்த்து கட்டி நல்லவன் போல நடித்த கணவன் Wife dies husband arrested Tenkasi police crime ill
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் முருகன் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வி (30), இவர்களுக்கு ஜு (10). பூரணசெல்வி (7) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த 11ந்தேதி செல்வி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வி இறந்து விட்டதாக கூறினர். விஷயத்தை கேள்விப்பட்டு அலறியடித்து ஆஸ்பத்திரிக்கு ஓடிவந்தார், முருகன். மனைவி உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார். உடலை வீட்டுக்கு கொண்டு சென்ற குடும்பத்தினர் இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடுகளை செய்தனர். இதனிடையே, செல்வியின் சாவில் மாமம் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த யாரோ ஒருவர், போலீஸ் கட் டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்து சொன்னார்.