/ தினமலர் டிவி
/ பொது
/ நாமக்கல் மூதாட்டி சம்பவம்: 2 ஆசாமிகள் கைது: பகீர் வாக்குமூலம் woman dies hacked to death namakkal p
நாமக்கல் மூதாட்டி சம்பவம்: 2 ஆசாமிகள் கைது: பகீர் வாக்குமூலம் woman dies hacked to death namakkal p
கொங்கு மண்டலத்தில் தனியாக இருக்கும் வயதான தம்பதிகளை குறிவைத்து கொலை செய்து நகை பணத்தை கொள்ளளையடிக்கும் சம்பவங்கள், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடந்தன. அது சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் நடக்க ஆரம்பித்துள்ளது. சேலம் மாவட்டம் சின்னேரி காட்டில் கடந்த மாதம் 20ம்தேதி 70 வயது மூதாட்டி சரஸ்வதியை நகைக்காக வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது, நாமக்கல்லில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி அருகே கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (65).
ஜூன் 10, 2025