/ தினமலர் டிவி
/ பொது
/ மகளிர் வார்டுக்குள் புகுந்த காமுகனுக்கு தர்ம அடி | woman harassment | kilpauk medical hospital
மகளிர் வார்டுக்குள் புகுந்த காமுகனுக்கு தர்ம அடி | woman harassment | kilpauk medical hospital
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பிடலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை வார்டுக்குள் புகுந்து காமுகன் துணிகரம் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவன் சதிஷ்(வயது 28). சில வாரங்களுக்கு முன் வேலை தேடி சென்னை வந்தான். வேலை எதுவும் கிடைக்கவில்லை. தங்க இடமின்றி நின்றான். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் உறவினர்கள் நிறைய பேர் தங்கியிருப்பதை பார்த்தான். அவர்களோடு சேர்ந்து இரவு நேரங்களில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் தூங்க தொடங்கினான். நேற்று நன்றாக மது குடித்துவிட்டு மருத்துவமனைக்கு வந்தான். நள்ளிரவில் மருத்துவமனையின் மகளிர் நோயாளிகள் வார்டுக்குள் புகுந்தான்.
ஜன 13, 2025