உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலகின் உயரமான முருகனுக்கு பாத பூஜை-வீடியோ | World tallest murugan | Muthumalai Murugan | Thaipusam

உலகின் உயரமான முருகனுக்கு பாத பூஜை-வீடியோ | World tallest murugan | Muthumalai Murugan | Thaipusam

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முத்து மலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா களைகட்டியது. உலகிலேயே உயரமான முருகன் சிலை இந்த கோயிலில் தான் உள்ளது. பார்க்கவே பிரமாண்டமாக இருக்கும் சிலையின் உயரம் 146 அடி. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் தைப்பூசத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று திருக்கல்யாணம் முடிந்தது. இன்று பல வண்ண மலர்களால் அலங்கரித்த மயில் மீது வள்ளி தெய்வானையுடன் சுவாமி எழுந்தருளினார். 146 அடி உயரம் கொண்ட முருகனுக்கு பாத பூஜையும், பின்னர் லிப்டின் மேல் சென்று முருகன் வேலுக்கு பன்னீர் அபிஷேகமும் செய்து தங்கள் வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை