இளைஞர் உயிரை குடித்த பைனான்ஸ் கம்பெனி நோட்டீஸ் Youth took extreme step kanniyakumari police crime f
குமரி மாவட்டம் அருமனை அடுத்த அம்பலக்கடை பகுதியை சார்ந்தவர் பிரபாகரன். விவசாயி. இவரது மகன் பிரதீஷ் (29). மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். பிரதீஷ் தாயார் சில மாதங்களுக்கு முன் உடல்நல பிரச்னையால் இறந்து விட்டார். தாய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக 2 ஆண்டுக்கு முன்பு வில்லுக்குறி பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 5 லட்ச ரூபாயை தந்தையும், மகனும் கடனாக பெற்றனர். ஒவ்வொரு மாதமும் தவணையை சரியாக கொண்டு போய் நிதி நிறுவனத்தில் கட்டி விடுவார்கள். ஆனால் கடந்த 2 மாதமாக சில பல பிரச்னைகளால் இருவருக்குமே பண வரவு தடைபட்டது. இதனால் 2 மாதமாக தவணைத் தொகையை செலுத்தவில்லை.