வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரில் யுவன் மீது வழக்கு | Case against Yuvan Sankar Raja| House rent
வாடகை பாக்கி விவகாரம் யுவனுக்கு பறந்த சம்மன்! பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சென்னை நுங்கம்பாக்கத்தில் வாடகை வீட்டில் சில காலம் குடியிருந்தார். அப்போது ஒரு சில சில மாதங்களுக்கு மட்டுமே சரியாக வாடகை கொடுத்ததாகவும், பல மாத வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் ஜமீலா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள என் வீட்டில் குடியிருந்த யுவன் சங்கர் ராஜா, அவ்வப்போது படப்பிடிப்பிற்கு சென்றுவிடுவார். தனக்கு வரும் வருமானத்தில் சில மாத வாடகையை சேர்த்து வைத்து கொடுப்பார். ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் அவர் திடீரென வீட்டை காலி செய்து சென்று விட்டார். அது பற்றி எனக்கு தகவல் கூட தரவில்லை. அக்கம் பக்கத்தினர் கூறிதான் எனக்கே தகவல் தெரிந்தது. அவர் குடியிருந்த காலத்திற்கான பல மாத வாடகை பாக்கியும் இன்னும் தரவில்லை. 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி உள்ளது. அவர் இசையமைத்த புதிய திரைப்படம் வெளியானதும் வாடகை பாக்கியை தருவதாகக் கூறினார். ஆனால் தற்போது பல முறை போன் செய்தும் போனை எடுக்க மறுப்பதாகவும் புகாரில் கூறி இருந்தார். தன் மீதான புகாரை மறுத்த யுவன் சங்கர் ராஜா, தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக 5 கோடி ரூபாய் கேட்டு வீட்டின் உரிமையாளருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். போலீசார் நடத்திய விசாரணையில் யுவன் சங்கர் ராஜா வாடகை பாக்கி வைத்திருப்பது அம்பலமாகி இருப்பதாக கூறப்படுகிறது.