உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜவை பந்தாடிய பழனிசாமி; சீட்டுக்காக சீனியர்களும் சதி: இளம் நிர்வாகிகள் கொதிப்பு

பாஜவை பந்தாடிய பழனிசாமி; சீட்டுக்காக சீனியர்களும் சதி: இளம் நிர்வாகிகள் கொதிப்பு

#BJP #VinojBSelvam #Annamalai #ADMK #Palanisamy #EPS #TNelection2026 #Election2026 #Chennai #Velachery #T.Nagar #Mylapore #Tamilisai #Vanathi #L.Murugan #NainarNagendran தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி அமைந்துவிட்டாலும், பாஜவுக்கு சொற்ப இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, பாஜ நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. வெறும் 27 இடங்களை மட்டும் கொடுத்ததுடன், பாஜவுக்கு செல்வாக்கு இல்லாத இடங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து, தங்களிடம் தள்ளிவிட்டுள்ளதாக, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மீது பாஜ இளம் நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேட்ட தொகுதிகள் கிடைக்காததால், அவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற பேச்சும் வலுத்துள்ளது. கட்சியில் சீனியர்களின் ஆதிக்கத்தால் அண்ணாமலை ஓரங்கட்டப்படுவதாக, அவரது ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். அண்ணாமலை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக வேண்டும் எனவும் அவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இது எட்டப்பன்களின் காலம் என, தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகரும், காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும் என, ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினி சொன்ன வாசகத்தை, தமிழக பா.ஜ., செயலர் வினோஜ் செல்வமும், சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில், சென்னையில் உள்ள தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் அதிமுகவை விட பாஜ அதிக ஓட்டு பெற்றது. ஆனால், அவற்றைக் கூட பாஜ இம்முறை கேட்டுப்பெறவில்லை. தமிழிசை போட்டியிடுவதற்காக மயிலாப்பூரை மட்டும் கேட்டுப் பெற்று, பாஜவுக்கு சாதகமான தொகுதிகளை அதிமுகவுக்கு தாரை வார்த்துள்ளதாகவும், முன்னாள், இந்நாள் மத்திய அமைச்சர்கள், மாநில தலைவர்கள், எம்எல்ஏக்கள் மீது பாஜ தொண்டர்களின் ஒரு பிரிவினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் துவங்கி இரண்டு நாட்கள் கடந்த நிலையில், பாஜவில் இன்னும் வேட்பாளர் பட்டிலயே வெளியாகவில்லை. கட்சியின் மேலிட தலைமை ஒப்புதலுடன் விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியானதும் பெரும் பூகம்பமே வெடிக்கலாம் எனவும், அதிருப்தியில் உள்ள பாஜ தொண்டர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏப் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை