பாஜவை வரவிடாமல் தடுக்க பிளான் ரெடி | jammu kashmir| J&K election result
ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடந்தது. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடந்துள்ளது. 2019ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால், அட்சி அமைப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜ மற்றும், மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிகள் தனித்தனியாக களமிறங்கின. செவ்வாயன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு ரிசல்ட் அறிவிக்கப்படுகிறது. ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் மெகபூபா கட்சியுடன் தேர்தலுக்கு பிந்தய கூட்டணி வைப்பீர்களா? என பரூக் அப்துல்லாவிடம் கேட்கப்பட்டது. பதிலளித்த அவர், ஏன் வைக்க கூடாது? இங்கு பாஜவை ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்க அவர்களுடன் கூட்டணிக்கு தயார் எனக்கூறினார். நாங்கள் அனைவரும் ஒரே விஷயத்துக்காக பணியாற்றுகிறோம். மாநில மக்களின் நலன் தான் முக்கியம். மெகபூபா உடன் கூட்டணி அமைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை; காங்கிரசுக்கும் இருக்காது என பரூக் அப்துல்லா கூறினார்.