உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவு! | Vijay | TVK | Amitsha | ADMK | BJP | ADMK Alliance | DM

விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவு! | Vijay | TVK | Amitsha | ADMK | BJP | ADMK Alliance | DM

27ம் தேதி கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜய்க்கு வழங்கப்படும் மத்திய போலீஸ் பாதுகாப்பை இரு மடங்காக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி இருந்தால் தான் அக்கட்சியை வீழ்த்த முடியும் என பாஜ நினைக்கிறது. அதற்காக அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா. ஆனால் திமுக கூட்டணியை வீழ்த்த மேலும் பலம் வேண்டும் என சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேக்கள் வாயிலாக தெரிய வந்தது. நடிகர் விஜயையும் எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என முடிவெடுத்து அதற்கேற்ப காய் நகர்த்தல்களை அமித்ஷா துவங்கினார். ஆனால் அதிமுக, பாஜவையும் விஜய் தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததால் முயற்சி பலனளிக்கவில்லை. இந்த சூழலில் தான் கரூர் சம்பவத்தின் பின்னணியில், திமுக தரப்பு இருக்கிறது என சொல்லும் தவெகவினர் கருத்தை அதிமுகவினரும், பாஜவினரும் வழி மொழிகின்றனர். கரூர் சம்பவத்துக்கு ஆறுதல் சொல்ல நடிகர் விஜயிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளதும் கூட்டணியில் விஜய் இணையலாம் என்ற அறிகுறியை ஏற்படுத்தி உள்ளது. விஜயுடனான தனது பேச்சில் அதை உணர்த்திய அமித் ஷா, கரூர் சம்பவத்துக்குப் பின், உங்களுக்கு அச்சுறுத்தல் கூடுதலாகி உள்ளது. ஏற்கனவே வழங்கும் மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என கூறி உள்ளார். அமித் ஷா நினைப்பது போல எதுவும் நடந்து விடக்கூடாது என்ற பதற்றத்தில் திமுக தரப்பு உள்ளது. கரூர் வழக்கை சிபிஐ கையில் எடுத்தால் நிச்சயம் அது திமுகவை நோக்கித்தான் பாயும். தேர்தல் நெருக்கத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, மொத்த திமுகவையும் தேர்தல் வேலை பார்க்க விடாமல் செய்வர் என திமுக தலைவர்கள், தலைமையிடம் எடுத்து கூறி உள்ளனர். இதை சாதுர்யமாக எதிர்கொள்வதே, கட்சிக்கும் தலைமைக்கும் நல்லது என முதல்வர் ஸ்டாலின் நம்புகிறார். இந்த விஷயத்தில் வேகமாக செல்ல வேண்டாம் என பாஜ தரப்பை, குறிப்பாக அமித் ஷாவை இருதரப்புக்கும் நெருக்கமானவர்கள் வாயிலாக சமாதானப்படுத்தும் முயற்சியிலும் திமுக தரப்பு களம் இறங்கி உள்ளது என்றனர். #Vijay | #TVK | #Amitsha | #ADMK | #BJP | #ADMKAlliance | #DMK | #Karur | #karurstampede

அக் 02, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajakumar
அக் 04, 2025 09:19

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் இதுவரை விரும்பத்தகாத, சட்டத்திற்கு கேடான நிகழ்வு நடந்ததில்லை. ஏனென்றால் இது காவாலி கூட்டம் அல்ல, கருத்தியல் கூட்டம். மக்கள் முட்டாள்கள் கிடையாது, மக்கள் மக்காக இருந்தால் எனக்கு 36 லட்சம் வாக்கு செலுத்தி 3வது கட்சியாக ஆக்கி இருக்க மாட்டார்கள். ஓட்டுப்பெட்டி இயந்திரங்கள் இருக்கும் வரை வாக்குகளை ஏமாற்ற முடியும் என்பது மோடிக்கும் தெரியும். ராகுல் காந்திக்கும் தெரியும், நாட்டு மக்களுக்கும் தெரியும். இந்தியாவிற்கு இந்த வாக்கு பெட்டிகளை தயாரித்துக் கொடுக்கும் ஜப்பான் நாட்டில் வாக்கு சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது. படிக்காதவன் எப்படி தனக்கான நல்ல தலைவரை தேர்வு செய்வான். இப்படித்தான் கூட்டத்தில் கூடி சிக்கி சாவான். இப்பல்லாம் ரொம்ப கொலை வெறி ஏற்பட்டால், நாம ஏன் இவனை கொன்று ஜெயிலுக்கு போக வேண்டும் என நினைக்கிறார்கள். கூட்டத்தில் நசுங்கி செத்துட்டு வா என சொல்லும் நிலை உள்ளது. அழகர் ஆற்றில் இறங்கினாலும் கூடுறாங்க. ஆட்டக்காரன் வீதிக்கு வந்தாலும் கூடுறாங்க. நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது, ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்த ஆடு வருவதாக கூறியதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். அவ்வளவு அறிவார்ந்த சமூகமாக இது போய்க் கொண்டுள்ளது. ஒரு தலைவன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பதற்கு சான்று காமராஜர். இவ்வாறு தெரிவித்தார்.


Moorthy
அக் 02, 2025 09:03

சிக்கலான கூட்டணி என்றாலும் ,2026 தேர்தலில் 51% வாக்குகளை அள்ளும்


ஜெய்ஹிந்த்புரம்
அக் 03, 2025 05:59

அப்போ 42 பேரை கொன்னது உங்க உள்ளடி வேலை தானென்று தெரிந்து விட்டது. பெறவு எங்கிருந்து 51%? பூத்துக்கு 51 வோட்டு கெடைச்சாலே பெருசு


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி