உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுக வழக்கில் பழனிசாமி மன்னிப்பு கேட்டது ஏன்? | ADMK Case | EPS vs OPS | ADMK crisis | Palanisamy

அதிமுக வழக்கில் பழனிசாமி மன்னிப்பு கேட்டது ஏன்? | ADMK Case | EPS vs OPS | ADMK crisis | Palanisamy

நீங்கள் பொதுச்செயலாளரா? EPS-ஐ அதிர வைத்த நீதிபதி அதிமுக வழக்கில் அதிர்ச்சி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை எதிர்த்தும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் பன்னீர்செல்வம் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல் இளம்பாரதி, பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவில் பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு இருந்தது பற்றி சுட்டிக்காட்டினார். பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும் போது எப்படி பொதுச்செயலாளர் என்று குறிப்பிடலாம்? என பழனிசாமிக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த மனுவை பொதுச்செயலாளர் என்று எப்படி பதிவு செய்தார்கள் என்பது பற்றியும் நீதிபதி கேள்வி எழுப்பினார். நீதிபதி அதிருப்தி தெரிவித்ததால், உடனே பழனிசாமி தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. இதையடுத்து திருத்த மனு தாக்கல் செய்ய பழனிசாமிக்கு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை