உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இபிஎஸ் அட்வைஸ் | ADMK Meeting | Edappadi Palanisamy | Sellur Raju | C

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இபிஎஸ் அட்வைஸ் | ADMK Meeting | Edappadi Palanisamy | Sellur Raju | C

கேள்வி கேட்ட பழனிசாமி திகைத்து போன செல்லூர் ராஜு லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக, அதிமுகவில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. சிதம்பரம், மதுரை, பெரம்பலுார் லோக்சபா தொகுதிகளுக்கான கூட்டம் நடந்தது. சிதம்பரம் தொகுதி கூட்டத்தில், சில நிர்வாகிகள் பா.ம.கவுடன் இனி கூட்டணி வேண்டாம். அக்கட்சியால் நமக்கு பலனில்லை என வலியுறுத்தி உள்ளனர். அதற்கு பழனிசாமி, வரும் சட்டசபை தேர்தலில், பலமான கூட்டணி அமைப்போம். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என பதில் அளித்தார். மதுரை தொகுதிக்கான கூட்டத்தில், மாவட்டச் செயலர்கள் செல்லுார் ராஜு, ராஜன் செல்லப்பா, வேட்பாளர் சரவணன் ஆகியோர் பேசினர். அப்போது முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவிடம், அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டத்திற்கு மட்டும், 8,000 கோடி ரூபாய்க்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். அப்படி இருந்தும், தேர்தலில் நாம் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். ஏன் ஓட்டுகளை பெறவில்லை என பழனிசாமி கேட்டுள்ளார். பிறகு சரி சரி, நடந்ததை மறந்து அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற பாருங்கள் எனக் கூறி, அடுத்த கருத்துக்குப் போய் இருக்கிறார் பழனிசாமி.

ஜூலை 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை