அதிமுக ஆட்சியில் கூட பரந்தூர் தான் தேர்வானது paranthur | airport | tn govt dmk | mk stalin
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் பசுமை வெளி ஏர்போர்ட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் 2 ஆண்டுக்கு மேலாக தொடர் போரட்டம் நடத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் தமது முதல் அரசியல் களமாக, திங்களன்று பரந்தூரில் இறங்கினார். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்போல், பரந்தூர் ஏர்போர்ட்டையும் ரத்துசெய்ய குரல் கொடுத்தார். பரந்தூர் ஏர்போர்ட் மீண்டும் பேசுபொருளாகி உள்ள நிலையில், அது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஏர்போர்ட் அமைக்க பண்ணூரை விட பரந்தூர் மிகவும் பொருத்தமான இடமாக இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டு உள்ளது. 2020ம் ஆண்டிலேயே முந்தைய ஆட்சியில் பரந்தூர் ஏர்போர்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதன் மூலம் தொழில் வளர்ச்சி உட்பட பல முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விமான போக்குவரத்து ஆணையம் அந்த இடத்தை தேர்வு செய்துள்ளது. டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு ஏர்போர்ட்களுடன் ஒப்பிடும்போது, சென்னை ஏர்போர்ட் மிக சிறியது. அந்த ஏர்போர்ட்கள் 1150 ஏக்கர் முதல் 5500 ஏக்கர் வரை பெரிதானவை. சென்னை ஏர்போர்ட்1000 ஏக்கரில் தான் அமைந்துள்ளது.