/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மத்திய கிழக்கில் பதட்டமான சூழல் நிலவுவதால் உலக நாடுகள் அதிர்ச்சி! Israel | Airstrike | Iran missile
மத்திய கிழக்கில் பதட்டமான சூழல் நிலவுவதால் உலக நாடுகள் அதிர்ச்சி! Israel | Airstrike | Iran missile
ஈரான் தனது அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வந்தால் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பலமுறை எச்சரித்தன. இதுகுறித்து இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவும், ஈரானும் பல கட்ட பேச்சு நடத்தின. ஆனால் அதில் எந்த சமரசமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஈரானுடன் நடந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் நான் மகிழ்ச்சியாக இல்லை” என்றார்.
பிப் 28, 2026