உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமித்ஷா விசிட்டில் நொடிக்கு நொடி சஸ்பென்ஸ் | Amit Shah chennai visit | Annamalai | bjp admk allian

அமித்ஷா விசிட்டில் நொடிக்கு நொடி சஸ்பென்ஸ் | Amit Shah chennai visit | Annamalai | bjp admk allian

அந்த 6 நாற்காலி யார் யாருக்கு? அமித்ஷா விசிட்டில் சஸ்பென்ஸ் பரபரக்கும் தமிழக அரசியல் களம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். இந்த 2 நாள் பயணத்தில் 2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் பாஜ மாநில தலைவர் தேர்வு ஆகிய பணிகளை அமித் ஷா மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. முன்னதாக பாஜ மூத்த தலைவர் தமிழிசையின் வீட்டிற்கு சென்ற அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தனின் மறைவுக்காக ஆறுதல் தெரிவித்தார். பின்னர் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்தார். இதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள பிரபல விடுதியில் செய்தியாளர் சந்திப்பு நடக்கவுள்ளது. இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கான மேடையில் மொத்தமாக 7 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதில் அமித் ஷா ஒரு நாற்காலியில் அமரும் பட்சத்தில், மீதமுள்ள 6 நாற்காலிகள் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. நாற்காலிகளுக்கு பின்னால் இருக்கும் திரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. இதனால் இன்று தேர்தலுக்கான கூட்டணி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதன் பின் தமாக தலைவர் ஜி.கே. வாசன் அமிஷ் ஷாவை சந்தித்தார். இந்த நிலையில் 2 நாற்காலிகளில் அதிமுக, தமாகா அமர்ந்தாலும், மீதமுள்ள 4 நாற்காளிகள் யாருக்கானது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ், டிடிவி தினகரன், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வருவார்களா என்ற விவாதமும் அதிகரித்துள்ளது.

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி