/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கூட்டணி விவகாரத்தில் அமித்ஷா முடிவே இறுதியானது: எல்.முருகன் | Amit shah | BJP | ADMK
கூட்டணி விவகாரத்தில் அமித்ஷா முடிவே இறுதியானது: எல்.முருகன் | Amit shah | BJP | ADMK
தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. முதல் ஆளாக அதிமுக - பாஜ கூட்டணி உறுதியான நிலையில், பல கட்சிகள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கூட்டணி பேசி வருகின்றன. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே மத்திய அமைச்சர் அமித்ஷா , தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜ அங்கம் வகிக்கும் என்று கூறி கூட்டணிக்குள் ஒரு அணுகுண்டை போட்டார்.
ஜூலை 12, 2025