ெந்தில் பாலாஜியோடு சேர்த்து 3 பேர்: பரபரப்பு கிளப்பும் அன்புமணி | Anbumani | Controversy | Senthil B
மின்வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 400 கோடி ரூபாய் ஊழல் குறித்து 30 மாதங்கள் ஆகியும் வழக்கு பதியாதது ஏன் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பினார். தமிழக மின் வாரியத்திற்கு கூடுதல் விலை கொடுத்து 45,800 டிரான்ஸ்பார்மர் வாங்கப்பட்டது குறித்து வழக்குத் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்புதுறையிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் தரப்பட்டு 30 மாதங்கள் ஆகும் நிலையில் இன்று வரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. தமிழகத்தை உலுக்கிய டிரான்ஸ்பார்மர் ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகளைக் காப்பாற்ற திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021ம் ஆண்டு முதல் 2023 வரை மின்சார வாரியத்திற்கு 45,800 டிரான்ஸ்பார்மர்கள் 1182 கோடிக்கு வாங்கப்பட்டன. ஒவ்வொரு டிரான்ஸ்பார்மருக்கும் 50 சதவிகிதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில் மின்வாரியத்திற்கு 387 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஐகோர்ட் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்புதுறையிடம் அறப்போர் இயக்கம் 2023 ஜூலை 6ம் தேதி புகார் அளித்தது. #AnbumaniRamadoss #PMKNews #TamilNaduPolitics #PoliticalControversy #CorruptionExposed #IndianPolitics #AnbumaniStatement #ElectionDrama #DravidianPolitics