ோசடிகள் அம்பலம் ஆகும்போது ஆட்சியில் திமுக இருக்காது anbumani ramodoss| pmk president|
பாமக தலைவர் அன்புமணியின் அறிக்கை: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். முன்னதாக பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பின் 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்த்துள்ளதாகவும், 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். திமுக அரசு கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் 10 சதவீதம் கூட நடைமுறைக்கு வராத நிலையில், முதலீடு ஒப்பந்தங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது பச்சை பொய். பொய்யை தவிர வேறு எதுவும் இல்லை. இதை மக்கள் நம்ப மாட்டார்கள். முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி கடந்த 20ம் தேதி பேசிய தொழில்துறை அமைச்சர் ராஜா, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கையெழுத்திட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 77 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக கூறியிருந்தார். 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் 80 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக தெரிவித்து இருந்தார். அவர் சொல்லி 10 நாட்களே ஆன நிலையில் எஞ்சிய 20 சதவீத ஒப்பந்தங்கள் எப்படி செயல்பாட்டுக்கு வந்தன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தேர்தல் வாக்குறுதி பற்றியும் திமுக அரசு இப்படித்தான் பொய் கூறி வந்தது. அதுபோல தொழில் முதலீடு விவகாரத்திலும் கதைகளை கூறி வருகிறது. இதெல்லாம் பொய் என்பதை பாமக அம்பலப்படுத்தும். தமிழகத்துக்கு வந்த முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட 4 ஆண்டுகளாக பாமக கேட்கிறது. மடியில் கனம் இல்லை என்றால் அந்த விவரங்களை திமுக அரசு வெளியிட்டு நிரூபித்து இருக்கலாம். ஆனால், செய்யமாட்டார்கள். காரணம், பொய் மட்டும்தான் திமுகவின் முதலீடு. திமுகவின் இந்த மோசடிகள் வெகு விரைவில் அம்பலமாகும். அப்போது திமுக அரசை ஆட்சியில் இருந்து மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்று அன்புமணி கூறியுள்ளார். #AnbumaniRamadoss #PMKPresident #AnbumaniCriticiseStalin #MKStalin #TnCM #DMKGovernment #PMK #TamilNaduInvestment #MKStalinForeignTrip #TamilPolitics #AnbumaniVsStalin #InvestmentInTamilNadu #TamilNadu #PoliticsInTN #StateOfTamilNadu #TradeAndInvestment