உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆந்திராவில் துவங்கியது அடுத்த புயல்! | Andhra Pradesh | Chandrababu Naidu | Nara Lokesh

ஆந்திராவில் துவங்கியது அடுத்த புயல்! | Andhra Pradesh | Chandrababu Naidu | Nara Lokesh

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில துணை முதல்வராக ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உள்ளார். சந்திரபாபுவின் மகன் நர லோகேஷ், மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளார். சமீபத்தில் நர லோகேஷ் மேற்பார்வையின் கீழ் தெலுங்கு தேசம் கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை நடந்தது. இதில் லோகேஷின் துடிப்பான செயல்பாட்டால் ஒரு கோடி உறுப்பினர்களை எட்டியுள்ளதாக அக்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். நர லோகேஷுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என கட்சிக்குள் புதிய குரல் வலுக்க துவங்கியுள்ளது. கட்சியின் பொதுச்செயலர் நர லோகேஷை துணை முதல்வர் பதவியில் பார்க்க வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். இதில் ஜனசேனா கட்சியினருக்கு ஆட்சேபனை இருக்கலாம். இறுதி முடிவு முதல்வரின் கைகளில் தான் உள்ளது என ஆந்திர சட்டசபை துணை சபாநாயகர் ரகுராம கிருஷ்ண ராஜு கருத்து தெரிவித்து உள்ளார்.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ