உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அண்ணா பல்கலை சம்பவத்தில் அந்த சார் யார்?: அதிமுக - திமுக மோதல் anna university crime| admk eps

அண்ணா பல்கலை சம்பவத்தில் அந்த சார் யார்?: அதிமுக - திமுக மோதல் anna university crime| admk eps

அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனை காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை ஸ்டாலின் அரசு செய்ததாக அதிமுக பொதுச்செயலாளர் விமர்சித்துள்ளார். திமுக அரசின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை அதிமுகவின் தொடர் போராட்டத்தால், குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனை சாத்தியப்படுத்தி உள்ளது. FIRல் குறிப்பிட்ட அந்த சார் யார்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது? அந்த SIRஐ காப்பாற்றியது யார்? இந்த கேள்விகளுக்கு அதிமுக அரசு அமைந்ததும் பதில் கிடைக்கும். ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த SIRஐ காப்பாற்ற முடியாது என்று பழனிசாமி கூறியுள்ளார். பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக, உண்மையான நடவடிக்கை எடுக்காமல் பழனிசாமி இழுத்தடித்ததால் அந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்க 6 ஆண்டுகள் ஆனது. ஆனால், அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் ஐந்தே மாதங்களில் தீர்ப்பு வந்து இருக்கிறது. அந்த வயிற்றெரிச்சலில் பழனிசாமி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். ஞானசேகரன் தான் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்து இருக்கிறது. ஆனால், பெண்களை அச்சுறுத்தும் அற்ப புத்தியோடு யார் அந்த சார் என கேட்டு அருவருப்பு அரசியல் செய்கிறார் பழனிசாமி. சம்பவத்தின்போது, யாருடனும் ஞானசேகரன் பேசவில்லை அவரது போன் பிளைட் மோடில் இருந்தததாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. இல்லாத SIRகளை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

ஜூன் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை