உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பெண் ஐபிஎஸ் அதிகாரி மீது புகார் கூறி பதவி விலகிய டிஎஸ்பி! Anna university student Case | Cyber crime

பெண் ஐபிஎஸ் அதிகாரி மீது புகார் கூறி பதவி விலகிய டிஎஸ்பி! Anna university student Case | Cyber crime

அண்ணா பல்கலை மாணவி வழக்கு சைபர் கிரைம் டிஎஸ்பி திடீர் விலகல்! வழக்கில் என்ன நடக்கிறது? சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. வழக்கின் எப்ஐஆர் வெளியான விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்ற சைபர் கிரைம் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி பணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தன்னை சரியாக பணி செய்ய விடாமல் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக அவர் கூறி உள்ளார்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி