/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சமையல் சிலிண்டர் விலை விஷயத்தில் அண்ணாமலை பதிலடி | Annamalai | BJP | MK Stalin | DMK | Gas cylinder
சமையல் சிலிண்டர் விலை விஷயத்தில் அண்ணாமலை பதிலடி | Annamalai | BJP | MK Stalin | DMK | Gas cylinder
சொன்னதை செய்யாமல் மறந்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் ஸ்டாலின் உண்மையை மறைக்க முடியாது தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: நமது நாடு ஒட்டு மொத்த சமையல் எரிவாயு பயன்பாட்டில் சுமார் 60 சதவீதம் இறக்குமதியையே சார்ந்துள்ளது. சர்வதேச அளவில் சமையல் எரிவாயு நிர்ணயம் செய்யும் சவுதி ஒப்பந்த விலை கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 385 டாலராக இருந்தது. 2025 பிப்ரவரியில் 629 டாலராக 62 சதவீதம் விலை உயர்ந்திருக்கிறது. ஆனால் நமது நாட்டில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 200 ரூபாய் விலை குறைக்கப்பட்டது.
ஏப் 08, 2025