திருப்பரங்குன்றம் செல்ல எல்.முருகனுக்கு அனுமதி மறுப்பு! | Annamalai | L Murugan | Thiruparankundram
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தமிழக டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 17ம் தேதி திருப்பரங்குன்றம் சென்றார். மலை மீதுள்ள சுப்பிரமணியர் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில்களுக்கு செல்ல முயன்றபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அமைச்சர், முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தும், கோயில் வாசலில் அவரை போலீசார் கையாண்ட விதம் வருத்தம் அளிக்கிறது. தடை குறித்து அமைச்சர் கேள்வி எழுப்பியபோது, உயர் அதிகாரிகளிடம் இருந்து இந்த உத்தரவு வந்ததாக போலீசார் கூறி உள்ளனர். ஒரு எம்பி அவர் விரும்பும் இடத்தில் வழிபடும் உரிமையை தடுத்து போலீசார் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உள்ளனர். இதற்கு எல். முருகன் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். எம்பி, அமைச்சராக உள்ள ஒருவரே இப்படி அவமானப் படுத்தப்பட்டால், மாநிலத்தில் உள்ள சாதாரண மக்களின் நிலை என்ன? என்று அண்ணாமலை கடிதத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.