கல்வி அமைச்சர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கே இந்த நிலை Annamalai bjp | Education minister | tn govt
மத்திய அரசு வழங்கிய ₹5,583 கோடி எங்கே?: பொய் கூற கூச்சமில்லையா அண்ணாமலை கேள்வி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: பள்ளி கல்வி துறை அமைச்சரின் மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளியில், சுவர் இல்லை, கூரை இல்லை, போதிய ஆசிரியர்களும் இல்லை. வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் வகுப்பு நடக்கிறது. இதுதான் தமிழக பள்ளி கல்வி துறையின் நிலை. திருச்சி, பச்சை மலையில், ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள இப்பள்ளிக்கு 2 ஆண்டுக்கு முன் புதிய கட்டிடம் கட்ட போவதாக கூறி பழைய கட்டிடத்தை இடித்தனர். 2 ஆண்டு ஆகியும் கட்டிடம் கட்டவில்லை. பள்ளி கல்வித்துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி 44,042 கோடி ரூபாய் எங்கே செல்கிறது?. அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகளுக்காக 2021 தொடங்கி 2024 வரை வழங்கப்பட்ட சமக்ர சிக் ஷா திட்ட நிதி 5 ஆயிரத்து 583 கோடி ரூபாய் எங்கே போனது? வாங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று பொய் கூறக் கூச்சமாக இல்லையா? என அண்ணாமலை கேட்டுள்ளார்.