டிஜிபி நியமன விதிகள் புறக்கணிப்பு: அண்ணாமலை கண்டனம்
தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக திமுக அரசு விதிமுறைகளை மீறி செயல்படுகிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். மாநில டிஜிபியை நியமனம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சுப்ரீம் கோர்ட் மிக தெளிவாக வகுத்து கொடுத்திருக்கிறது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன், அடுத்த டிஜிபி-க்கு தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று ஒரு விதி சொல்கிறது. சங்கர் ஜிவாலை காவல் துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தேதியும் அரசுக்கு தெரியும். ஆனால் தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு. ஒரு சில காவல் துறை உயர் அதிகாரிகள், திமுக வட்ட செயலாளர்கள் போல் பேசுவதையும் மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர். அடுத்த டிஜிபி பதவிக்கு தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வை தட்டி பறித்திருப்பதோடு, சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டு நெறிமுறைகளையும் திமுக அரசு புறக்கணித்திருக்கிறது. காவல் துறை அதிகாரிகளை, அரசியலுக்கு பலிகடாவாக்கும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். #Annamalai #DGPIssue #DMKGovt #Politics #Kerala #India #PoliticalReform #GovernmentAccountability #LawEnforcement #PolicyChange #StateGovernment #ElectoralPolitics #JusticeSystem #PoliceReform #PoliticalDebate #PublicSafety #CitizenRights #Leadership #PoliticalNews #CurrentAffairs