/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நவாஸ்கனி விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்த அண்ணாமலை Annamalai on Navaskani | thiruparankundram issue
நவாஸ்கனி விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்த அண்ணாமலை Annamalai on Navaskani | thiruparankundram issue
நவாஸ்கனி செய்த காரியம் செக் வைத்த அண்ணாமலை திருப்பரங்குன்றம் விவகாரம் பூதாகரம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். இதன் புனிதம் காக்கப்பட வேண்டும் என்று இந்துகள் வலியுறுத்தி வந்த நிலையில், அதே மலையில் உள்ள தர்காவில் உயிர்களை பலியிட போலீசார் தடை விதித்தனர். இந்த தடையை மீறி கோழி, ஆடுகளை பலியிட்டு சமபந்தி விருந்து வழங்கப்போவதாக சில முஸ்லிம் அமைப்புகள் அறிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இவ்வளவு பதற்றத்துக்கு ஊடே ராமநாதபுரம் எம்பியும் தமிழக வக்பு போர்டு தலைவருமான நவாஸ் கனி திருப்பரங்குன்றம் சென்றார்.
ஜன 23, 2025