/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அண்ணாமலை சாட்டையால் அடித்ததும் நடந்த பரபரப்பு | Annamalai protest video | Anna university girl case
அண்ணாமலை சாட்டையால் அடித்ததும் நடந்த பரபரப்பு | Annamalai protest video | Anna university girl case
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் 19 வயதான இன்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டுள்ளது. இந்த சம்பவத்தில் திமுகவுக்கு எதிராக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜ தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களின் கவனத்தை ஈர்க்க தன்னை தானே வற்புறுத்தி கொள்ளும் போராட்டம் நடத்த இருப்பதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி கோவையில் உள்ள தனது வீட்டில் தன்னை தானே சாட்டையால் அடித்து நூதன போராட்டத்தை இன்று துவங்கி வைத்தார்.
டிச 27, 2024