அண்ணாமலை பற்றி மீண்டும் வாய் விட்ட சிவகுமார் Annamalai vs DK Shivakumar | delimitation | BJP vs DMK
அண்ணாமலை எல்லாம் முக்கியமில்ல பாவம் அவருக்கு ஒண்ணும் தெரியாது மலையுடன் மீண்டும் மோதிய டிகே சிவகுமார் ஸ்டாலின் அழைப்பு விடுத்த தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்த கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை சீண்டினார் அந்த பாவப்பட்ட அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் தான் வேலை பார்த்தார். எங்கள் பவர் என்னவென்று அவருக்கு தெரியும் என்று சிவகுமார் சொன்னார். அதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, சித்தராமையா ஆட்சியை கவிழ்த்து முதல்வர் ஆக சிவகுமாருக்கு வாழ்த்துகள் என்று கிண்டல் செய்தார். சென்னையில் இருந்து கர்நாடகா புறப்பட்ட டிகே சிவகுமார் மீண்டும் அண்ணாமலையை சீண்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தை அண்ணாமலை விமர்சித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு சிவகுமார் அளித்த பதில்: இங்கு அண்ணாமலை சொன்னது முக்கியம் இல்லை. பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த நாட்டுக்கு என்ன சொன்னார்கள் என்பது தான் முக்கியம். பாவப்பட்ட அண்ணாமலைக்கு ஒண்ணும் தெரியாது. கட்சி கொடுத்த வேலையை பார்க்கிறார். கட்சிக்கு மட்டும் உண்மையாக இருக்கிறார். தமிழகத்துக்கு உண்மையாக இல்லை. அவர், அவரது வேலையை பார்க்கட்டும் என்று சாடினார்.