உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இடிந்து விழுந்த பள்ளி கூரை தப்பிய சின்னக்குழந்தைகள் | government elementary school | Annamalai

இடிந்து விழுந்த பள்ளி கூரை தப்பிய சின்னக்குழந்தைகள் | government elementary school | Annamalai

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு வரை 34 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் மொத்தமே 2 வகுப்பறைதான். பள்ளி கட்டடத்தை கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த 9 மாதங்களாக பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், இன்று காலை வழக்கம்போல பள்ளி தலைமை ஆசிரியர் வகுப்பறைகளை திறந்தார். ஒரு வகுப்பறையில் மேற்கூரை இடிந்து விழுந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மாணவிகள் உட்காரும் இருக்கைகளில் சிமென்ட் காரைகள் பொலபொலவென உடைந்து விழுந்திருந்தன. ஸ்மார்ட் கிளாசுக்கு பயன்படுத்தப்படும் எல்இடி டிவி மீதும் காரைகள் விழுந்து கிடந்தன.

செப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை