உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அண்ணாமலை போட்டியிடும் தொகுதி! NDA முக்கிய முடிவு Annamalai | NDA vs DMK | TN Election 2026 | EPS

அண்ணாமலை போட்டியிடும் தொகுதி! NDA முக்கிய முடிவு Annamalai | NDA vs DMK | TN Election 2026 | EPS

தமிழக அரசியலில் பாஜ மாநில தலைவராக இருந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் அண்ணாமலை. அவர் மாநில தலைவர் பொறுப்பில் இல்லாவிட்டாலும் அவரது அதிரடி அரசியல் இன்னமும் தொடர தான் செய்கிறது. வரப்போகும் சட்டசபை தேர்தலில் அவர் இந்த முறை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று பாஜ தொண்டர்கள் மட்டும் இன்றி திமுக உள்ளிட்ட மற்ற கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் அவர் போட்டியிட இருக்கும் தொகுதி பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இது பற்றி பாஜ முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறியது: ஓரிரு நாட்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீட்டு பேச்சு இன்னும் துவங்கவில்லை. ஆனாலும், பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பழனிசாமி தொடர்ந்து பேசி வருகிறார். என்டிஏவில் தே.மு.தி.க. வராததால் பா.ஜ., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்கின்றன. பா.ஜ.,வை பொறுத்தவரை கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, தென்சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளை குறி வைக்கிறது.

மார் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !