உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எம்ஜிஆர் காலம் தொட்டே முக்கிய பதவிகள் வகித்தவர் அன்வர் | Anwhar raajaa | ADMK | DMK

எம்ஜிஆர் காலம் தொட்டே முக்கிய பதவிகள் வகித்தவர் அன்வர் | Anwhar raajaa | ADMK | DMK

அதிமுக அமைப்பு செயலாளர்களில் ஒருவரான அன்வர் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுக- பாஜ கூட்டணி பற்றி சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த அன்வர் ராஜா, தமிகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜவின் எண்ணம் ஒருபோதும் நடக்காது என கூறியது பேசு பொருளானது. அவர் அதிமுகவில் இருந்து விலகுவார் என்று அப்போதே யூகங்கள் எழுந்தன. இச்சூழலில், திமுகவில் சேருவதற்காக அறிவாலயத்திற்கு அன்வர் ராஜா சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவரை கட்சியை விட்டு நீக்கினார் பழனிசாமி.

ஜூலை 21, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தனவேல்
ஜூலை 21, 2025 12:17

அன்வர் ராஜாவின் நல்ல முடிவு... பாஜகவிற்கு பழனிசாமி அடிமையாக இருக்கிறார் அதனால் மானமுள்ள மனிதராக திமுகாவில் இணைந்தார்..


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை