உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஊழல் புகார் சொன்ன இயக்கத்திற்கு எதிரான வழக்கில் பழனிசாமி ஆஜர் | Arappor Iyakkam | Edappadi

ஊழல் புகார் சொன்ன இயக்கத்திற்கு எதிரான வழக்கில் பழனிசாமி ஆஜர் | Arappor Iyakkam | Edappadi

கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை பணிக்கான டெண்டரில் 692 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. இதில் முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதும் புகார் கூறப்பட்டது. தமது பெயருக்கு வேண்டுமென்றே அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாக அறப்போர் இயக்கத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். 1.10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறு கோரினார். பழனிசாமி பற்றி அவதூறாக பேசக்கூடாது என்று அறப்போர் இயக்கத்திற்கு ஐகோர்ட் தடை விதித்தது. இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக பழனிசாமி இன்று ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார். நீதிபதி மகாலட்சுமி முன்பு அவர் சாட்சியம் அளித்தார். வழக்கு டிசம்பர் 11க்கு ஒத்திவைக்கப்பட்டது.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை