அவசர அவசரமாக நடந்த கூட்டம்: பின்னணி என்ன? | Arvind Kejriwal | Bhagwant Mann | AAP
டில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வந்தது. சமீபத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. தோல்விக்கு பல காரணங்கள் கூறப்படாலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கெஜ்ரிவாலின் அணுகுமுறை மற்றும் பொய்யான வாக்குறுதிகளே காரணம் என சொல்கின்றனர். பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜ கூறி வருகின்றன. இந் நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகிகள் 30 பேர் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அவசர அவசரமாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மனுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கெஜ்ரிவால் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், டில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன், ஆம் ஆத்மியின் பஞ்சாப் எம்எல்ஏக்கள் 91 பேர், எம்பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பஞ்சாப் பிரச்னை குறித்தும், 2027ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் குறித்தும், டில்லி சட்டசபை தேர்தல் தோல்வி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்து பேசினார்.