கூட்டணி கட்சிகளின் விமர்சனங்களால் சங்கடத்தில் திமுக | K.Balakrishnan | CPIM | DMK | Oppose police
விசிக பாணியில் மார்க். கம்யூ களத்தில் இறங்கிய பாலகிருஷ்ணன் திமுக அரசுக்கு நெருக்கடி 2019 முதல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உட்பட 10 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கு பின், விசிக துணை பொதுச்செயலராக இருந்த ஆதவ் அர்ஜுனா, திமுக அரசை விமர்சிக்க துவங்கினார். தவெக தலைவர் விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. 2026ல் மன்னராட்சிக்கு முடிவு கட்டப்படும் என திமுக தலைமையை குறிவைத்து கடுமையாக விமர்சித்தார். ஆதவ் அர்ஜூனா பேச்சால் கூட்டணிக்குள் பூகம்பம் வெடிக்க, அவர் கட்சியை விட்டே விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. இது போதாதென்று மற்றொரு துணை பொதுச்செயலர் வன்னியரசு, 2026 சட்டசபை தேர்தலில், திமுகவிடம் 25 தொகுதிகளை கேட்போம் என்றார்; இதுவும் ஆளும் வட்டாரத்தை சூடேற்றியது.