வங்கதேசத்தில் அமைதி திரும்பும் வரை போராட இந்து அமைப்புகள் முடிவு! Bangladesh Hindu Issue | Protest i
வங்கதேசத்தில் நடக்கும் இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து தமிழகம் முழுவதும் வங்கதேச இந்து மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான இந்து அமைப்பினர் திரண்டனர். பாதுகாப்புக்கு 300க்கும் மேற்பட்ட போலீஸாரும் குவிக்கப்பட்டனர். இதில் பாஜ மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், முன்னாள் கவர்னர் தமிழிசை, பாஜ அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், வி.பி.துரைசாமி, இந்து முன்னணி இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். அவர்களை குண்டுகட்டாக கைது செய்த போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசாரின் அராஜக்துக்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.