ஆசாத் மனைவியும் அல்வா கொடுத்த அதிர்ச்சி கதை Syria issue | Bashar-al-Assad vs Asma al Assad | Russia
ஆசாத்துக்கு அடி மேல் அடி 54 ஆண்டு சாம்ராஜ்யம் போச்சு இப்ப மனைவி அஸ்மா குட்பை சிரியாவில் 13 ஆண்டுகளாக ஆட்சியை பிடிக்க பல கிளர்ச்சி படைகள் போராடின. துருக்கி, அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் என பல நாடுகள் ஆதரவு பெற்ற தனித்தனி கிளர்ச்சி படைகள் அரசுக்கு எதிராக சண்டை செய்தன. ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகள் கிளர்ச்சி படைகள் வசம் சென்றன. இருப்பினும் பெரும்பகுதியை அதிபர் பஷர் அல் ஆசாத் அரசு ஆட்சி செய்து வந்தது. நவம்பர் இறுதியில் திடீர் விஸ்வரூபம் எடுத்த ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சி படை முழு வேகத்தில் அரசு படைகளுடன் சண்டை செய்தது. முக்கிய நகரங்களை அடுத்தடுத்து பிடித்த கிளர்ச்சியாளர்கள் வெறும் பத்தே நாளில் தலைநகர் டமாஸ்கசையும் பிடித்து விட்டனர். கிளர்ச்சி படை டமாஸ்கசை நெருங்கும் போதே குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி சென்றார் அதிபர் பஷர் அல் ஆசாத். அவரையும் அவரது குடும்பத்தையும் ரஷ்யா தான் பத்திரமாக அழைத்து சென்றது. அவர்களுக்கு இப்போது தங்கள் தலைநகர் மாஸ்கோவில் அடைக்கலம் கொடுத்திருக்கிறது ரஷ்யா. சிரியாவை விட்டு போகும் முன் பதவியை ராஜினாமா செய்த அதிபர், கிளர்ச்சியாளர்களிடம் அரசை ஒப்படைக்கும் படி கூறி விட்டு சென்றார்.