பாகிஸ்தானுக்கு சவுதி எச்சரிக்கை! | Beggars | Saudi Arabia issues stern warning to Pakistan
பிச்சைக்காரர்களை அனுப்பினால் விளைவு வேற மாதிரி இருக்கும்! மேற்கத்திய நாடான சவுதி அரேபியாவுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் ஹஜ் மற்றும் உம்ரா புனித யாத்திரை செல்கின்றனர். பாகிஸ்தானில் இருந்து புனித யாத்திரைக்காக செல்பவர்கள் அங்கு பிச்சை எடுப்பதாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் விமானத்தில் சென்ற 16 பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் சவுதியில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சவுதி அரசு கடந்த மே மாதம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அனுமதி இல்லாமல் ஹஜ் யாத்திரை வர தடை விதிக்கப்படுகிறது. அதை மீறி வரும் நபர்களுக்கு 2.22 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தது. இச்சூழலில் சவுதி ஹஜ் அமைச்சகம், பாகிஸ்தான் மத விவகாரங்கள் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், உம்ரா விசாவில் சவுதி அரேபியாவுக்குள் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் அது பாகிஸ்தானின் உம்ரா மற்றும் ஹஜ் யாத்ரீகர்களை எதிர்மறையாக பாதிக்கும் என கூறியுள்ளது. வெளிநாடுகளில் பிடிபடும் பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்கள் என கடந்த ஆண்டு வெளியான புள்ளி விபரம் தெரிவிக்கிறது.