உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இஸ்ரேல் பிரதமரை தீர்த்துக்கட்ட நடந்த சம்பவம்-அதிர்ச்சி பின்னணி | Israel vs Hezbollah | Netanyahu

இஸ்ரேல் பிரதமரை தீர்த்துக்கட்ட நடந்த சம்பவம்-அதிர்ச்சி பின்னணி | Israel vs Hezbollah | Netanyahu

நெதன்யாகு கதை முடிக்க ஸ்கெட்ச் இஸ்ரேலியர்களே செய்த காரியம் திடுக்கிடும் பின்னணி காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், லெபனானில் செயல்படும் ஹெஸ்புலா பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. இந்த போரின் உச்சமாக 2 பயங்கரவாத அமைப்புகளின் உச்ச தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே, ஹசன் நஸ்ரல்லா, யாஹ்யா சின்வார் ஆகியோரை இஸ்ரேல் கொலை செய்தது. இதற்கு பழி தீர்க்கும் விதமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்ல ஹெஸ்புலா பயங்கரவாதிகள் சதி செய்தனர். அக்டோபர் 19ம் தேதி வடக்கு இஸ்ரேலின் செசேரியா நகரில் உள்ள நெதன்யாகுவின் சொந்த பங்களாவில் ட்ரோன் மூலம் குண்டு வீசினர். இதில் அவரது படுக்கை அறையின் ஜன்னல் பகுதி சேதம் அடைந்தது. குண்டு வெடித்த போது நெதன்யாகு குடும்பம் அங்கு இல்லை. இந்த நிலையில் 2வது முறையாக இப்போது நெதன்யாகு வீட்டில் குண்டு வீசப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறையும் அவரது செசேரியா பங்ளா வீடு தான் தாக்கப்பட்டு இருக்கிறது. இரவில் 2 குண்டு வெடித்ததாக தகவல் பரவியது. இருப்பினும் இதை ஹமாசோ, ஹெஸ்புலாவோ செய்யவில்லை. மாறாக இஸ்ரேலில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சிலர் செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து இஸ்ரேல் குற்றப்பிரிவு போலீசாரும், ஜின்பெட் புலனாய்வு நிறுவனமும் விசாரணையை துவங்கின.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை