உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீகார் தேர்தலில் வன்முறை: துணை முதல்வர் மீது தாக்குதல்

பீகார் தேர்தலில் வன்முறை: துணை முதல்வர் மீது தாக்குதல்

243 தொகுதிகளை கொண்ட பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கும் என தேர்தல் அணையம் அறிவித்தது. முதல்கட்ட தேர்தல் இன்று 121 தொகுதிகளில் நடந்து வருகிறது. பாஜவை சேர்ந்த துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா லக்கிசராய் Lakhisarai தொகுதியில் போட்டியிடுகிறார். தன் தொகுதியில் ஓட்டுப்பதிவு எப்படி நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய துணை முதல்வர் விஜய் குமார் சென்றார். ஒவ்வொரு பகுதியாக சென்றவர், குரியாரி கிராமத்திற்கு சென்றார். அப்போது அவர் காரை ஊருக்குள் விடாமல் ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்கள் வழிமறித்து அடாவடியில் ஈடுபட்டனர். கார் மீது தாக்குதல் நடத்தினர். செருப்புகளையும், கற்களையும் வீசி மிரட்டல் விடுத்தனர். மாட்டு சாணத்தையும் வீசினர். விஜய் குமார் சின்ஹா ஒழிக, பாஜ ஒழிக எனவும் கோஷங்களை முழங்கினர். திரும்பிப்போ எனவும் ஆக்ரோஷமாக கத்தினர். பதிலுக்கு பாஜ தொண்டர்களும் கோஷமிட்டதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. #BiharPolitics #VijayKumarSinha #ConvoyAttack #BiharElections #Lakhisarai #RJD #PoliticalViolence

நவ 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை