உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அடுத்த ஷாக்... பீகார் ஓட்டு லிஸ்ட்டில் பாகிஸ்தானியர்கள் எப்படி? | bihar sir issue | ECI | pakistani

அடுத்த ஷாக்... பீகார் ஓட்டு லிஸ்ட்டில் பாகிஸ்தானியர்கள் எப்படி? | bihar sir issue | ECI | pakistani

பீகாரில் இன்னொரு அதிர்ச்சி ஓட்டு லிஸ்ட்டில் பாகிஸ்தானியர்கள் வெளியே வந்த 69 ஆண்டு ரகசியம் பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், கடந்த ஜூலை மாதம் தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிர பணியை மேற்கொண்டது. அதில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெரிய அளவில் அரசியல் செய்து வருகின்றன. இந்த நிலையில் பீகார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தானியர்கள் 2 பேர் பெயர்கள் இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிர பணியின் போது இதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பஹல்பூரில் வசித்து வந்த இம்ரானா கானம் மற்றும் பிர்தோஷியா கானம் இருவரும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இது பற்றி உள்துறை கவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் கொண்டு சென்றது. அவர்களது ஆவணங்களை சரிபார்த்தபோது இருவரும் 1956ல் இந்தியாவுக்கு வந்தவர்கள் என்பது தெரிய வந்தது. விசா காலம் முடிந்தும் இந்தியாவை விட்டு வெளியேறாமல் பஹல்பூரிலேயே தங்கியிருந்து, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றதும் உறுதியானது. இதையடுத்து இருவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டன. பூத் முகவர்கள் வாயிலாகவும் இரு பாகிஸ்தானியரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதாக கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான நவால் கிஷோர் சிங் கூறினார். ஆதார் அடையாள அட்டையை நம்பகமான ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியாது என தேர்தல் கமிஷன் கூறி வந்தது. இந்த சூழலில் இரு பாகிஸ்தானியர், மோசடி ஆவணங்களை வைத்து ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வரை பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆக 25, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஆக 25, 2025 12:01

இந்த செய்தி யெல்லாம் நீதிபதி களுக்கு கண்ணில் தென் படுவதில்லையா? நக்சல் ஆதரவு என்பது மட்டும் கண்ணுக்கு தெரியுது. பொது மக்களுக்கு ஒரு சந்தேகம் நீதிமன்றங்களுக்குள்ளும் அயல்நாட்டு சக்திகள் புகுந்து விட்டதா?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !